
யாழில் இன்று அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல்
யாழ்ப்பாணம் கொழும்புதுறை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இன்று அதிகாலை ஐந்து மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் சிறைக் காவலாளியின் வீட்டின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES இலங்கை
