குறைவடைந்த தேங்காய் விலை

ஹட்டன் நகரில் தேங்காயின் விலை கணிசமானளவு குறைவடைந்துள்ளதால் விற்பனை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தேங்காய் வருமானம் அதிகரித்துள்ளதாக ஹட்டன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டது.
தற்போது அதன் விலை 100 ரூபாவிலிருந்து 170 ரூபா வரை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் தேங்காயின் விலை மேலும் குறைவடைவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.