அரச வைத்திசாலைகளின் உள்நோயாளர்களுக்கு சத்தான உணவை வழங்குவதற்கான விசேட திட்டம்

அரச வைத்திசாலைகளின் உள்நோயாளர்களுக்கு  சத்தான உணவை வழங்குவதற்கான விசேட திட்டம்

அரச வைத்திசாலைகளில் உள்நோயாளர்களாக சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு தரமான சத்தான உணவை வழங்குவதற்காக விசேட திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட வேலைத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான முன்னோடித் திட்டம் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையை மையமாகக் கொண்டு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அமைச்சில் நடைபெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,

“நோயாளர்களுக்கு , சத்தான உணவை வழங்க வேண்டிய அவசியத்துடன் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் ஆர்பிக்கப்படும் இந்த முன்னோடித் திட்டம்,
எதிர்காலத்தில் நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் செயற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்

அரச வைத்தியசாலைகளில் உள்ள நோயாளர்களுக்கு உணவு மற்றும் பானங்களை வழங்குவதற்காக சுகாதார அமைச்சகம் ஆண்டுதோறும் பெரும் தொகையைச் செலவிடுகிறது என்றாலும், அந்தப் பணம் நியாயமாகச் செலவிடப்படுகிறதா என்பது குறித்து கவலைகள் உள்ளன ” என்றார்

 

Share This