பாஜக, திமுகவுடன் கூட்டணியமைக்கப் போவதில்லை – விஜய் திட்டவட்டம்

பாஜக, திமுகவுடன் கூட்டணியமைக்கப் போவதில்லை – விஜய் திட்டவட்டம்

தேர்தலில் பாஜக, திமுகவுடன் கூட்டணியமைக்கப் போவதில்லையென தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதன்போதே விஜய் இவ்வாறு கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த விஜய்,

தவெக தலைமையில்தான் கூட்டணி அமையும். திமுகவுடன், பாஜகவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கூடிக் குழைந்து கூட்டணிக்குப்போக நாங்கள் திமுகவோ, அதிமுகவோ இல்லை.

தவெக எப்போதும் விவசாயிகளுடன் துணை நிற்கும். மக்களை மதரீதியாக பிளவுபடுத்த பாஜக முயற்சிக்கிறது. பாஜகவின் விஷமத்தனமான, பிளவுவாத அரசியல் தமிழகத்தில் எடுபடாது.

தந்தை பெரியாரை அவமதித்தோ, அண்ணாவை அவதூறுக்கு உள்ளாக்கியோ எங்கள் மதிப்புமிக்க தலைவர்களை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்ய நினைத்தால் அதில் பாஜக ஒருபோதும் வெற்றிபெற முடியாது” என்றார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1,200 பேர் பங்கேற்றுள்ளனர்.

 

CATEGORIES
TAGS
Share This