தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜய் தெரிவு

தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜயை தெரிவு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
த.வெ.க. செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திப்பது தொடர்பிலும், கட்சி சார்பில் பிரமாண்டமான அளவில் மாநில மாநாடு நடத்துவது குறித்தும் நிர்வாகிகளுடன் விஜய் கலந்துரையாடினார்.
மேலும் த.வெ.க. செயற்குழு கூட்டத்தில் முக்கிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சட்டசபை தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட முடிவுகள் எடுப்பது குறித்து கட்சி தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கல்,
சட்டசபை தேர்தலை சந்திக்கும் விதமாக செப்டம்பர் மாதம் முதல் வாரம் முதல் டிசம்பர் மாதம் வரை விஜய் தீவிர சுற்றுப்பயணம்
மேற்கொள்ளல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒகஸ்ட் மாதத்தில் இரண்டாவது மாநில மாநாடு நடத்தப்படும், சட்டசபை தேர்தலில் விஜய் முதலமைச்சர் வேட்பாளர்,
சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைமையில் கூட்டணி உட்பட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.