சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர் முன்மொழிவு
தற்போது வெற்றிடமாகவுள்ள சபாநாயகர் பதவிக்கு பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பத்தி, லக்ஷமன் நிபுணாரச்சி ஆகியவர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசாங்கம் எதிர்வரும் சில தினங்களில் இது தொடர்பில் இறுதி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
சபாநாயகர் பதவிக்காக நிஹால் கலப்பத்தியின் பெயர் இதற்கு முன்னரும் முன்மொழியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.