பிலிப்பைன்ஸின் மின்டானோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸின் மின்டானோவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவானதாக சரை்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி இன்று (28) காலை 7.07 மணிக்கு டாவோ ஆக்ஸிடென்டல்(Tao Occidental) மாகாணத்திலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் 101 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் எரிமலையியல் மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் நிலநடுக்கம் குறித்து அறிவித்துள்ளதுடன், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.