அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் அட்டைகளைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் அட்டைகளைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று புதன்கிழமை முதல் கட்டண அட்டைகளைப் ( debit and credit cards )பயன்படுத்தி கட்டணங்களை செலுத்தலாம் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதன்படி , தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம-குருணாகல் பிரிவில் உள்ள வெளியேறும் இடங்களில் தேவையான உட்கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

35 இடை மாறல்கள் மற்றும் 119 வௌியேறும் வாயில்களில் இன்று முதல் குறித்த சேவை வசதிகள் செயற்படுத்தப்படும்
என கூறப்பட்டுள்ளது.

இந்த அட்டை அடிப்படையிலான கட்டண முறை விரைவுச் சாலைகளில் நெரிசலைக் குறைக்க முடியும் என்பதுடன் நேரத்தை மீதப்படுத்தவும் , பயணிகளின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கவும் முடியும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This