இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்

இந்திய பாகிஸ்தான் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக இன்றிரவு 08 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார்.
கடந்த மாதம் 22 ஆம் திகதி பஹல்காமில் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா
பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்திருந்தது.
இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக பாகிஸ்தானும் அதிருப்தி வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய – பாகிஸ்தான் இடையே முறுகல் தீவிரமடைந்தது.
பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 07 ஆம் திகதி ஆபரேஷன் சிந்தூர் ஆரம்பமானது.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்களுக்கு எதிராக பாகிஸ்தானும் தொடர் பதில் தாக்குதலை நடத்தி வந்த நிலையில் போர் நிறுத்த அறிவிப்பு வெளியானது.
எவ்வாறாயினும் பாகிஸ்தானின் எந்தவொரு பயங்கரவாதச் செயலும் எதிர்காலத்தில் போர்ச் செயலாகக் கருதப்படும் என்றும், அதற்கேற்ப கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.