பொதுப்பிட்டிய பகுதியில் வீடொன்று தீக்கிரை
வாதுவ – பொதுப்பிட்டியவில் வீடொன்று தீயினால் முற்றாக எரிந்துள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வாதுவ, பொத்துப்பிட்டிய, கரடகஹா வீதியிலுள்ள வீடொன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பக்கத்து வீட்டுக்கும் தீ பரவியதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் குழு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.