கட்சியை ஒன்றிணைக்க உதவுமாறு மைத்திரிக்கு அழைப்பு

கட்சியை ஒன்றிணைக்க உதவுமாறு மைத்திரிக்கு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், கட்சியை ஒன்றிணைப்பதற்கான திட்டத்திற்கு தலைமை தாங்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

தலைமைப் பதவியை ஏற்க விருப்பமில்லை என்றாலும், கட்சியை ஒன்றிணைப்பதற்கான திட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு அமைப்பாளர்கள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு தடவைகள் இந்தக் கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதியிடம் அமைப்பாளர்கள் முன்வைத்துள்ளனர்.

“நாம் ஸ்ரீலங்கா” என்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்த மற்றொரு அமைப்பும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளது.

எனினும், மைத்திரிபால சிறிசேன இந்தக் கோரிக்கைக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை என்றும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர் இது தொடர்பில் அவர் கவனம் செலுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கதிரை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்கத்கது.

 

Share This