ரயிலில் மோதி காட்டு யானையொன்று பலி

கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற இரவு அஞ்சல் ரயிலில் காட்டு யானையொன்று மோதி உயிரிழந்துள்ளது.
சியம்பலங்காமுவ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் 10 வயது மதிக்கத்தக்க யானை ரயிலில் மோதியதால் பலத்த காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த யானையின் உடற்பாகங்கள் சிதறிக்கிடந்த நிலையில் மீகலேவா வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள், பிரேத பரிசோதனை நடவடிக்கைகளை
முன்னெடுத்துள்ளனர்.