வீதித் தடையில் வான் மோதி விபத்து – பொலிஸ் அதிகாரி ஒருவர் பலி

வீதித் தடையில் வான் மோதி விபத்து – பொலிஸ் அதிகாரி ஒருவர் பலி

நிக்கவெரட்டிய, ரஸ்நாயக்கபுரவில் உள்ள பொலிஸ் வீதித் தடையில் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிங்கிரியவிலிருந்து ரஸ்நாயக்கபுர நோக்கிச் சென்ற வான் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதித் தடையொன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு நபர் காயமடைந்து நிக்கவெரட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் ரஸ்நாயக்கபுர  பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 37 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக வானின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் முதற்கட்ட விசாரணையில்  சாரதி குடிபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

Share This