சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் விசேட வைத்தியராகப் பயிற்சி பெற்று வரும் வைத்தியர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போதிலும் 24 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக அரச வைத்திய சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி,அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு நாளை வியாழக்கிழமை (13) காலை 8.00 மணி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இன்று காலை 08.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.