தேங்காய் விலை குறைவு

சந்தையில் கடந்த வாரத்தை விட தேங்காய் விலை படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் 250 ரூபாவாக இருந்த தேங்காய் ஒன்றின் விலை தற்போது 200 ரூபா முதல் 220 ரூபா வரை குறைவடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், சீரற்ற காலநிலை காரணமாக எதிர்காலத்தில் தேங்காய் விலை குறித்து உறுதியான அறிவிப்பை வெளியிட முடியாது என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.