பருவச் சீட்டு வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்ல மறுப்பது தண்டனைக்குரிய குற்றம்

இலங்கை போக்குவரத்து சபையிடமிருந்து பெற்றுக்கொண்ட பருவச் சீட்டுகளை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்கள் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பருவச் சீட்டுவைத்திருக்கும் ஏனையோரை ஏற்றிச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பருவச் சீட்டு வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்ல மறுப்பது தண்டனைக்குரிய குற்றம் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
மேலும் பருவச் சீட்டு வைத்திருக்கும் பயணிகளை ஏற்றிச் செல்ல மறுக்கும் ஊழியர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சபையின் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
பருவச் சீட்டுகள் தொடர்பாக சிரமங்களை எதிர்கொள்ளும் பயணிகள், அமைச்சின் அவசர தொடர்பு எண், 1958 மூலம் உடனடியாக முறைப்பாடுகளைத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
for season ticket holder