ஹொரணை, பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் தீ விபத்து

களுத்துறை – ஹொரணை, பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கருவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை அணைப்பதற்கு மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.
ஹொரணை தீயணைப்புத் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.