ட்ரம்ப், மோடி சந்திப்பு – அமெரிக்கா, இந்தியா உறவு வலுப்படுமா?

ட்ரம்ப், மோடி சந்திப்பு – அமெரிக்கா, இந்தியா உறவு வலுப்படுமா?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நிலையில் நாளை புதன்கிழமை அமெரிக்காவுக்கு பயணிக்கவுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு மாநாடு இடம்பெறும் நிலையில் அதில் பங்கேற்பதற்காக
பிரதமர் மோடி டெல்லியில் இருந்து பாரிஸ் சென்றார்.

பாரிஸில் இன்று நடைபெறும் 2 ஆவது நாள் செயற்கை நுண்ணறிவு மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.

பிரதமர் மோடி நாளை அமெரிக்காவுக்கு செல்கிறார். நாளை மறுதினம் வோஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்பை சந்திக்கவுள்ளார்.

கனடா, மெக்ஸிகோ, சீனா உட்பட பல்வேறு நாடுகள் மீது ட்ரம்ப் அதிக வரிகளை விதித்தாலும் இந்தியா மீது அவர் நேரடியாக கூடுதல் வரிகளை விதிக்கவில்லை.

ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா, இந்தியா இடையிலான பாதுகாப்பு உறவு மேலும் வலுப்படும். போர் விமானங்களுக்கான இன்ஜின்களை இணைந்து தயாரித்தல் , இராணுவத்துக்கு தேவையான அதிநவீன பாதுகாப்பு வாகனங்களை இணைந்து தயாரித்தல் தொடர்பில் ட்ரம்பும் மோடியும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

 

 

Share This