உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 72 கோடி ரூபாய் விரயச் செலவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 72 கோடி ரூபாய் விரயச் செலவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இதுவரையில் 72 கோடி ரூபாய்க்கும் அதிக தொகை எதுவித பயனுமின்றி விரயமாக செலவழிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை நிராகரித்து அதற்கு பதிலாக புதிதாக வேட்புமனுக்களை கோருவதே குறித்த தொகை வீணாக காரணமாக குறிப்பிடப்படுகின்றது.

தற்போது குறிப்பிட்ட பல செயற்பாடுகள் பழைய வேட்புமனுக்களின் படி மேற்கொள்ளப்பட்டதாகவும் அதற்காக அச்சிடப்பட்ட உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள் எதுவும் மீள வேட்புமனுக்கள் கோரும் போது பயன்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு மீள வேட்புமனுக்களை கோரும் சந்தர்ப்பத்தில் இதுவரையில் மேற்கொண்ட செலவுகளை மீள பயன்படுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தபால்மூல வாக்குகள் வரையிலான செயற்பாடுகள் தற்போது நிறைவுசெய்யப்பட்டுள்ள நிலையில் வேட்புமனுக்களை மீள கோரும்போது அனைத்து நடவடிக்கைகளையும் மீண்டும் புதிதாக ஆரம்பிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான பின்னணியிலேயே, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிர்ணயிக்கப்பட்ட 8 பில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகையிலிருந்து 72 கோடியே 56 இலட்சத்து 22 ஆயிரத்து 178 ரூபாய் 36 சதம் (72,56,22,178.36) செலவழிக்கப்பட்டுள்ளது.

Share This