மன்னார் வைத்தியசாலைக்கு இந்தியாவிடமிருந்து 600 மில்லியன் ரூபா நிதியுதவி

மன்னார் வைத்தியசாலைக்கு இந்தியாவிடமிருந்து 600 மில்லியன் ரூபா நிதியுதவி

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை விரிவுபடுத்தவதற்கு இந்திய அரசாங்கம் 600 மில்லியன் ரூபா  நிதியுதவி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை விபத்து மற்றும் அவசரநிலை பிரிவை நிர்மாணிப்பதற்கும் அப்பிரிவுக்கான மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகள் சந்தோஷ் ஜா, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க ஆகியோரால் நேற்று (09) இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கலந்துகொண்டார்.

இந்த திட்டமானது விபத்து மற்றும் அவசரநிலை பிரிவினை இரண்டு மாடியாக கட்டுவதற்கும் அப்பிரிவுக்கு தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களையும் கொள்முதல் செய்வதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Share This