மட்டக்களப்பில் கடற்கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம்

மட்டக்களப்பில் கடற்கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம்

கிளின் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுமார் 21 கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் காத்தான்குடி கடற்கரை பிரதேசமும் சிரமதானப் பணியூடாக சுத்தம் செய்யப்பட்டது.

காத்தான்குடி பிரதேச செயலகம், காத்தான்குடி நகர சபை ஆகியன இணைந்து சுத்தப்படுத்தல் பணியை முன்னெடுத்தனர்.

”சுத்தமான கடற்கரை – கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்” எனும் தொனிப்பொருளை அடைவதற்கு மாவட்ட மட்டத்தில் உள்ள கடற்கரைகளை தூய்மைப்படுத்துவதற்கு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பணியில் இராணுவ வீரர்கள், அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், சிவில் அமைப்பினர்கள் விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

Share This