நெடுந்தீவில் உழவு இயந்திர விபத்து இளம் குடும்பஸத்தர் பலி

நெடுந்தீவில் உழவு இயந்திர விபத்து இளம் குடும்பஸத்தர் பலி
நெடுந்தீவில் நேற்று இரவு இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் நெடுந்தீவைச் சேர்ந்த நவரத்தினம்  ஐங்கரன் என்ற இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.
நெடுந்தீவு மேற்கில் இருந்து உழவு இயந்திரத்தில் பயணித்தபோது பிரதேச வைத்தியசாலையினை அண்டியுள்ள மதவடியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் படுகாயமடைந்த நிலையில் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share This