அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு இன்று முதல் அமுல் – வர்த்தகப் போரை தூண்டக்கூடும் என எச்சரிக்கை

அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு இன்று முதல் அமுல் – வர்த்தகப் போரை தூண்டக்கூடும் என எச்சரிக்கை

அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புகள் இன்று புதன்கிழமை முதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம், தேர்தல் பிரசாரத்தின்போது, அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 10 வீதம் வரை வரி விதிக்கப்படும் என தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20 முதல் 60 வீதம் வரை வரி விதிக்கப்படும் என்றும் கூறினார்.

அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் ‘பரஸ்பர வரி’ என்பதை அறிமுகம் செய்தார்.  அதாவது ஒவ்வொரு நாடும் அமெரிக்காவின் இறக்குமதிப் பொருட்களுக்கு விதிக்கும் அதே வரியை அந்த நாட்டின் இறக்குமதிப் பொருட்கள் மீது விதிப்பதாகும். இந்த வரி விதிப்பு விகிதம் ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடும்.

இந்த புதிய வரி விதிப்பு திட்டம் அமுலாகும் இன்றைய நாளை அமெரிக்க வர்த்தகத்திற்கான விடுதலை நாள் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

புதிய வரி விதிப்புகள் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் என ட்ரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்த நிலையில் அவரது நியாயமான மற்றும் பரஸ்பர திட்டத்தின் விபரங்கள் தெளிவற்றதாகவே உள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இன்று வரி விதிப்பு திட்டங்களை தெளிவுப்படுத்துவார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வரிகள் நுகர்வோருக்கு அதிகளவான விலைகளை உயர்த்தி, பரந்த வர்த்தகப் போரை தூண்டக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Share This