மோசடி குற்றச்சாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த பெண் செம்பியன்பற்றில் கைது

மோசடி குற்றச்சாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த பெண் செம்பியன்பற்றில் கைது

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் குடும்ப பெண்ணிடம் வெளி நாடு அனுப்புவதாக கூறி 27 இலட்சத்தி 80 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடை சேர்ந்த ரமேஷ் பிரேமா என்னும் குடும்ப பெண்ணிடம் அவரது கணவரை கனடா அனுப்புவதாக கூறி பெண் ஒருவர் 27 இலட்சத்தி 80 ஆயிரம் ரூபாவை 2023ஆம் ஆண்டு பெற்றுள்ளார்.

அதன் பின்பு அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டதுடன் தாம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த குடும்ப பெண் காசு பரிமாற்றம் செய்யப்பட்டமைக்கான அனைத்து ஆதாரங்களுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து 2024ஆம் ஆண்டு சந்தேக நபருக்கு கிளிநொச்சி நீதிமன்றம் பயணத்தடை விதித்து பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், குறித்த பெண் சந்தேக நபர் மருதங்கேணி பொலிஸாரின் உதவியுடன் செம்பியன்பற்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் குறித்த நபர் அதே பகுதியில் பலரிடம் மோசடி செய்தமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை இன்று (26) கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்த மருதங்கேணி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

Share This