எதிர்வரும் நாட்களில் நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு?
நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் இடம்பெற்ற மழையுடன் கூடிய காலநிலையே உப்பு உற்பத்திக்கு சவாலாக அமைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக நிலவி வந்த அதிக மழை மற்றும் வெள்ள நிலைமை காரணமாக புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலையின் குச்சவேலி ஆகிய இடங்களில் உள்ள உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கி உப்பு உருகியுள்ளதாக தெரிவந்துள்ளது.
இதன்காரணமாக, எதிர்வரும் சில நாட்களில் நாட்டில் உப்புக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உப்பு நுகர்வு மிகவும் அதிகமாக உள்ள நாடாக இலங்கை காணப்படுகின்றது.