ஹர்ஷவுக்கு கொழும்பு மாவட்டத் தலைமை ஏன் வழங்கப்படவில்லை – மரிக்கார் பதில்

ஹர்ஷவுக்கு கொழும்பு மாவட்டத் தலைமை ஏன் வழங்கப்படவில்லை – மரிக்கார் பதில்

கட்சியின் கொள்கை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைமைத்துவம் வழங்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட தலைவர் பதவி, பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் இரண்டாவது அதிகூடிய வாக்குகளைப் பெற்ற கலாநிதி ஹர்ஷ டி சில்வாவுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பதவியை தன்வசப்படுத்தினார்.

இது குறித்து கலாநிதி ஹர்ஷ அதிருப்தி வெளியிட்டிருந்தார். இந்த நியமனம் தொடர்பான சர்ச்சை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் இன்று எழுப்பிய கேள்விக்கே மரிக்கார் இவ்வாறு பதிலளித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நியமனத்திற்கு எதிரான பரிந்துரைகள் காரணமாக அவருக்கு அந்த பதவி கிடைக்கவில்லை. கட்சித் தலைவர் தொடர்ந்தும் அந்தப் பதவியில் நீடிக்க விரும்புகிறார்.

அரசியலில், நாம் பொறுமையாக இருக்க வேண்டும், நாம் எப்போதும் விரும்புவதைப் பெற மாட்டோம். நாம் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் கூட சபையில் உரையாற்றுவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கான நேரம் உள்ளது” என்றார்.

 

 

Share This