இந்தியாவில் போர்க்கால ஒத்திகைகள் தீவிரம் – தமிழகத்திலும் ஒத்திகை ஆரம்பம்

இந்தியாவில் போர்க்கால ஒத்திகைகள் தீவிரம் – தமிழகத்திலும் ஒத்திகை ஆரம்பம்

பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலைத்தொடர்ந்து, அந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.

நாடளாவிய ரீதியில் 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெறுகிறது. சில வடமாநிலங்களில் ஏற்கனவே பயிற்சி ஆரம்பமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, தமிழகத்தில் இன்று சென்னை துறைமுகம், கல்பாக்கத்தில் ஒத்திகை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம், புதுச்சேரி ஆகிய இடங்களில் போர்க்கால ஒத்திகை ஆரம்பமாகியுள்ள நிலையில் ஒத்திகையின்போது சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கிகளை ஏந்தி அணிவகுப்பு நடத்தினர்.

இதேவேளை, செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையம் தாக்கப்படும் சூழலில் நிலைமையைச் சமாளிப்பது குறித்து ஒத்திகை நடத்தப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேரிடர் மேலாண்மை ஆணைய வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

புதுச்சேரி அருகே லாஸ்பேட்டையிலும் போர் சூழலில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

 

Share This