வலப்பனை பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசமானது

வலப்பனை பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.
தலைவரைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட திறந்த தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற பின்னர் தேசிய மக்கள் சக்தியின் நளின் தேசப்பிரிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத வலப்பனை பிரதேச சபையின் ஆரம்பக் கூட்டம், மத்திய உள்ளூராட்சி ஆணையாளர் சமில அத்தபத்து தலைமையில் வலப்பனை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச சபையின் புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்காக திறந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, தேசிய மக்கள் சக்தி கட்சியின் நளின் தேசப்பிரிய 34 வாக்குகளைப் பெற்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் லக்ஷான் ரந்திக 29 வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சுனில் குமாரசிங்க திறந்த வாக்கெடுப்பு மூலம் துணைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.