இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் – வாக்குப்பதிவு ஆரம்பம்

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
இதற்கமைய, காலை 10 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு நடவடிக்கைகள் மாலை 05 மணி வரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில், ஆளும் என்.டி.ஏ. கூட்டணி சார்பில், மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
அதேபோன்று இந்தியா கூட்டணி சார்பில், உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.
இந்திய குடியரசுத் துணைத் தலைவராக பதவி வகித்த ஜெகதீப் தன்கர், கடந்த ஜூலை மாதம் 21 ஆம் திகதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாள் இரவு தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து, குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்தது.