இரும்பு மீதான இறக்குமதி வரியை 50 வீதமாக உயர்த்திய ட்ரம்ப்

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு ஏற்கனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இரும்பு மீதான இறக்குமதி வரி 50 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
பென்சில்வேனியாவில் உள்ள இரும்பு ஆலையை ஆய்வு செய்தப்பின் செய்தியாளர்களை சந்தித்த போதே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த வரி விதிப்பு எதிர்வரும் புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி வரி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இரும்பு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் மீது இறக்குமதி வரி விதித்தார்.
இந்தியா, சீனா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரியை அறிவித்தார்.