அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் இந்தியாவிற்கு விஜயம்
அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் ஜேக் சல்லிவன் இந்தியாவிற்கு 02 நாள் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அவர் நாளை மற்றும் நாளை மறுதினம் புதுடெல்லியில் இந்திய அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா அணைகள் கட்டுவதால் இந்தியாவிற்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து இதன்போது, பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியாவில் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்த இந்தியாதான் சரியான நாடு என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் நம்புகின்றன.
இந்தப் பிரச்சினையில் இந்தியாவுக்குச் சாதகமாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இருக்கும் என அவதானிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில், பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணையை நிர்மாணிப்பதற்கு சீன அரசு அனுமதி வழங்கிய விவகாரத்தில் இந்தியா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
மேலும், சீனாவின் ஆக்கிரமிப்பு தொடர்பாக வலுவான கருத்துகளையும் முன்வைத்துள்ளது.