மத்திய வங்கிக்கு இரண்டு புதிய துணை ஆளுநர்கள் நியமனம்

மத்திய வங்கிக்கு இரண்டு புதிய துணை ஆளுநர்கள் நியமனம்

இலங்கை மத்திய வங்கி இரண்டு புதிய துணை ஆளுநர்களை நியமித்துள்ளது.

நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

மத்திய வங்கியின் முன்னாள் உதவி ஆளுநரான டாக்டர் சி. அமரசேகர, 2025 ஒக்டோபர் 24 முதல்  அமுலுக்கு வரும் வகையில் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாார்.

முன்னாள் உதவி ஆளுநரான கே.ஜி.பி. சிறிகுமார, 2025 நவம்பர் 3 ஆம் திகதி பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனங்கள், நிறுவனத்திற்குள் தலைமைத்துவத்தையும் மேற்பார்வையையும் வலுப்படுத்த மத்திய வங்கியின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This