
மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழப்பு
புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் நேற்று (13) இரவு நேருக்கு நேர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்னும் எந்த சூழ்நிலையும் கண்டறியப்படாத நிலையில், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர்களும் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களில் ஒருவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார், மற்றொருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோது உயிரிழந்தார்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இரண்டு பயணிகளும் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
