உக்ரெய்ன் ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ட்ரம்ப்
![உக்ரெய்ன் ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ட்ரம்ப் உக்ரெய்ன் ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ட்ரம்ப்](https://oruvan.com/wp-content/uploads/2025/02/trump-1.jpg)
உக்ரெய்ன் ஜனாதிபதி வோலோடிமார் செலென்ஸ்கியை அடுத்தவாரம் சந்திக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவை வரவேற்று ட்ரம்பிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக்
கூறினார்.
உக்ரெய்ன் – ரஷ்யா போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கம் நிலையில் ரம்ப் பதவியேற்ற உடன், போரை முடிவுக்கு கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் ட்ரம்ப் , ஜெலன்ஸ்கியை சந்திக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும் இந்த சந்திப்பு குறித்த மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.