பதவியேற்புக்கு முன்னர் மாபெரும் பேரணி நடத்தும் ட்ரம்ப்
அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இந்த மாதம் 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ள நிலையில் பேரணி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்.
இதன்படி,எதிர்வரும் 19ஆம் திகதி வோஷிங்டன் மாகாணத்தில் மாபெரும் பேரணி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பேரணியில் சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பதவியேற்பு நிகழ்ச்சியையொட்டி வோஷிங்டன் மாகாணத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த வருடம் நடைபெற்ற நிலையில் ட்ரம்ப் வெற்றிப் பெற்றார்.