ரொனால்டோவுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப்

ரொனால்டோவுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையால் ஒன்றில் போர்த்துகல் அணியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கலந்துகொண்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இடையேயான வெள்ளை மாளிகை சந்திப்பில் ரொனால்டோவும் கலந்து கொண்டுள்ளார்.

சவுதி மற்றும் அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் சவுதி இளவரசருக்கு டிரம்ப் பாரிய விருந்து ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார்.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை கௌரவிக்கும் வகையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக், டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் உள்ளிட்டவர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

2022ஆம் ஆண்டின் இறுதியில் சவுதி கழகமான அல்-நாசரில் வருடத்திற்கு 200 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் இணைந்ததிலிருந்து ரொனால்டோ சவுதி கால்பந்து லீக்கின் அடையாளமாக மாறியுள்ளார்.

இதன் அடிப்படையில் டிரம்ப்பை சந்திக்கும் சவுதி குழுவில் ரொனாட்டோவும் இணைந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சந்திப்பின் போது, ரொனால்டோவுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப், தனது இளைய மகன் பரோன், ரொனால்டோவின் மிகப் “பெரிய ரசிகன்” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது 19 வயதான மகன் பரோன், ரொனால்டோவை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Share This