60 நாள் போர் நிறுத்தத்திற்கு இணங்குமாறு ஹமாஸை வலியுறுத்தும் ட்ரம்ப்

காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்தை நிறைவு செய்வதற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்திற்கு ஹமாஸ் இணங்க வேண்டும் என்றும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
காசா மீது இஸ்ரேலிய படைகள் மேற்கொண்ட தாக்குதலில் 109 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் 28 பேர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை தளங்களில் உணவுப் பொதிகளுக்காக காத்திருந்த போது கொலை செய்யப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலின் முற்றுகைக்கு மத்தியில் மருத்துவமனையில் எரிபொருள் தீர்ந்துவிட்டதால் நூற்றுக்கணக்கான நோயாளர்கள் உயிரிழக்கும் அபாயம் காணப்படுவதாக வடக்கு காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவ மையமான அல்-ஷிஃபாவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60,000 ஐ அண்மித்துள்ளதுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.