ட்ரம்பின் நிர்வாக நடவடிக்கையால் 14 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் பதிவாகும் அபாயம்

ட்ரம்பின் நிர்வாக நடவடிக்கையால் 14 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் பதிவாகும் அபாயம்

வெளிநாட்டு மனிதாபிமான உதவிகளுக்கான அமெரிக்க நிதியில் பெரும்பகுதியைக் குறைப்பதற்கான ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்பின் நடவடிக்கை பாரிய விளைவுகளுக்கு வழிவகுக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

ட்ரம்பின் இந்த நிர்வாக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டால் 2030 ஆம் ஆண்டுக்குள் 14 மில்லியனுக்கும்  அதிகமான இறப்புகள் பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இறப்புகளில் அதிக ஆபத்தை குழந்தைகளே சந்திக்க நேரிடும் எனவும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தில் உள்ள

அனைத்து திட்டங்களிலும் 80 வீதத்துக்கும் அதிகமானவற்றை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கடந்த மார்ச் மாதம் தெரிவித்தார்.

இதன் விளைவு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உடைய பல நாடுகளுக்கு, உலகளாவிய தொற்றுநோய் அல்லது பெரிய ஆயுத மோதலுடன் ஒப்பிடத்தக்கது என லான்செட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நிதி குறைப்பு நடவடிக்கை பாதிக்கப்படக்கூடிய மக்களிடையே சுகாதாரத்தில் இரண்டு தசாப்த கால முன்னேற்றத்தை தலைகீழாக மாற்றும் அபாயம் காணப்படுவதாகவும்  ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Share This