ட்ரம்ப், சவுதி அரேபியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சவுதி அரேபியாவுக்கு நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்படி, இன்று காலை ரியாத்தை வந்தடைந்த ட்ரம்பை இளவரசர் முகமது பின் சல்மான் வரவேற்றார்.
இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்று,தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்திற்கு ட்ரம்ப் சவுதி அரேபியாவைத் தெரிவுசெய்துள்ளார்.
சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விஜயம் மேற்கொள்ளும் ட்ரம்ப் குறிப்பிடத்தக்க முதலீட்டை பெறுவார்
என எதிர்பார்க்கப்படுகிறது.