சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.5 மில்லியனை கடந்தது

சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.5 மில்லியனை கடந்தது

2025 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.5 மில்லியனை கடந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

அழகு, கலாசாரம் மற்றும் விருந்தோம்பல் நிறைந்த இலங்கையை பார்வையிடுமாறும் அமைச்சர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே, இந்த மாதத்தின் முதல் 18 நாட்களில் மாத்திரம் 150,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

Share This