தேயிலை ஏற்றிச் சென்ற வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயம்

தேயிலை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
ஹட்டன்- பொகவந்தலாவ பிரதான வீதியிலுள்ள நோர்வூட் சென் ஜோண்டிலரி பகுதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வாகனத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாகவே, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்த மூவரும் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.