யாழ் மாவட்டத்தில் போதைப்பொளுடன் மூவர் கைது

யாழ் மாவட்டத்தில் போதைப்பொளுடன் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொம்மைவெளி பகுதியில் நேற்றையதினம் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடமிருந்து சுமார் 15 இற்கும் அதிகமான போதை மாத்திரைகளும் 50 மில்லிகிராம் ஹெரோயினும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 18,19 மற்றும் 21 வயதுடைய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை இன்று (16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share This