அரிசியை இறக்குமதி செய்வதிலும் நெருக்கடி

அரிசியை இறக்குமதி செய்வதிலும் நெருக்கடி

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அறிவிடப்படும் வரியை குறைக்குமாறு அல்லது அரிசி விலையை அதிகரிக்குமாறு அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் விடுத்த கோரிக்கையை வர்த்தக, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நிராகரித்தமையினால் அரிசி இறக்குமதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்துக்கும் இடையில் வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த இரண்டு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்ட நிலையில், அதனை அமைச்சர் நிராகரித்துள்ளார்.

இந்த நிலையில் அரிசியை இறக்குமதி செய்ய முடியாது என இறக்குமதியாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் உறுப்பினர் நிஹால் செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில், ​​அரிசி இறக்குமதி வரியை குறைக்கும் அல்லது அரிசியின் விலையை அதிகரிக்கும் யோசனையை அமைச்சர் வசந்த சமரசிங்க நிராகரித்ததாக தெரிவித்தார்.

இறக்குமதியாளர்கள் அரிசியை ஏற்கனவே பதிவு செய்து இலங்கைக்கு கொண்டு வந்துள்ளதாக நிஹால் செனவிரத்ன மேலும் குறிப்பிட்டார்.

 

There is also a n.

Share This