இலங்கை வந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1.3 மில்லியனைத் தாண்டியது

இந்த ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.3 மில்லியனைத் தாண்டியுள்ளது.
இதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 27ஆம் திகதி வரை 13 லட்சத்து 41 ஆயிரத்து 953 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு இலங்கை வந்த சுற்றுலா பயணிகளில் பெரும்பாலோர் இந்தியர்கள் எனவும் ,இரண்டு லட்சத்து 74 ஆயிரத்து 919 இந்திய சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி, சீனா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிக எண்ணிக்கையில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதனிடையே, ஜூலை மாதத்தில் 27ஆம் திகதி வரை இலங்கை ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 909 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.