அதிக கடனை அரசாங்கம் பெறவில்லை – வெரிட்டே ரிசர்ச்

அதிக கடனை அரசாங்கம் பெறவில்லை – வெரிட்டே ரிசர்ச்

இந்த ஆண்டு வரவு செலவு திட்ட வரம்புகளுக்கு மேல் அரசாங்கம் கடன் பெற்றுக்கொள்ளவில்லை என வெரிட்டே ரிசர்ச் சமீபத்திய ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளது.

அதன்படி, அரசாங்கம் உள்ளூர் அளவில் பெற்றுக் கொள்ளும் மொத்த கடன் தொகை குறிப்பிடப்பட்டுள்ள வரம்பிற்குள் உள்ளதாக வெரிட்டே ரிசர்ச் கூறுகிறது.

இவ்வாண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீடுகளுக்கு அரசாங்கம் நிர்ணயித்த வரம்பு 3,670 பில்லியன் ரூபாய் என நிதியமைச்சின் தரவு அறிக்கை தெரிவிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் தொடக்கம் செப்டெம்பர் மாதம் வரை அரசாங்கம் எடுத்த கடன் தொகை 1,903 பில்லியன் ரூபா என்றும் மேலும், 1,766 பில்லியன் ரூபாவை அரசாங்கம் கடனாகப் பெற முடியும் எனவும் வெரிட்டே ரிசர்ச் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.

குறித்த தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் வரம்புக்கு மேலதிகமாக கடன் பெறும் அபாயமான நிலையில் அரசாங்கம் இல்லை என வெரிட்டே ரிசர்ச் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This