விளையாட்டு வினையானது – பரிதாபமாக பரிபோனது யுவதியின் உயிர்
வெளிநாட்டில் பணியாற்றும் கணவரிடம் விளையாட்டாக தூக்கிட்டு தற்கொலை செய்வது போல் நடத்த மனைவி நிஜமாகவே உயிரிழந்த சம்பவம் முல்லேரியா பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அங்கொட கொடெல்ல மாவத்தையில் வசித்து வந்த அனுத்தரா சிறிமான்ன என்ற 28 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அனுத்தராவுக்கு மூன்று வருடங்களுக்கு முன் திருமணமான நிலையில், அவரது கணவர் வெளிநாட்டில் பணிசெய்து வருகின்றார். இந்நிலையில், அவர்கள் புது வீடு ஒன்றை கட்டி அண்மையில் குடியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணவர் விரைவில் நாடு திரும்ப இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை, கணவருக்கு காணொளி அழைப்பெடுத்த அனுத்தரா தனது அறையில் உள்ள தூக்கிட்டு தற்கொலை செய்வது போல் நடித்துள்ளார்.
இதன்போது, அவரது கணவர் உடனடியாக வீட்டில் உள்ள உறவினர்களுக்கு அறிவித்து, இந்த சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், நாற்காலி கவிழ்ந்ததில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அனுத்தாரா, பாலர் பாடசாலை ஆசிரியையாக பணியாற்றி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலத்தின் இறுதிக் கிரியைகள் நாளை (08) மாலை உடுமுல்லை மயானத்தில் இடம்பெறவுள்ள நிலையில், பொலிஸார் மேலதி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.