கம்பளையில் இடம்பெற்ற கோர விபத்துக்கான காரணம் வெளியானது

கம்பளை, தொலுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 03 பெண்கள் உயிரிழந்த நிலையில் காரை செலுத்திய பெண்ணின் கவனக்குறைவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கம்பளை – தொலுவ பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றுமொரு பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பெண்கள் நால்வர் வீதியை கடக்க முயன்ற போது அந்த வீதியில் பயணித்த கார் ஒன்றும், லொறி ஒன்றும் மோதியதில் விபத்து
சம்பவித்தது.
கோவிலொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொள்வதற்காக குறித்த பெண்கள் வீதியில் சென்றதாக கூறப்பட்டது.
விபத்துக்குள்ளான காரை செலுத்திய பெண் சாரதி பயிற்சி அனுமதிப் பத்திரத்தை மாத்திரம் பெற்றக்கொண்டவர் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் காரினை செலுத்திய 36 வயதான பெண்ணின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என
பொலிஸார் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளனர்.
குறித்த பெண் தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் கம்பளை நகருக்கு சென்றிருந்த நிலையில் அவரது கணவர் காரை செலுத்தியிருந்ததாகவும் பின்னர் அவர் மனைவிக்கு காரை செலுத்துவதற்கு வாய்ப்பளித்ததாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த கார் விகாரைக்கு அருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்த நான்கு பெண்கள் மீதும் லொறியின் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
காரை செலுத்திய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பொலிஸ் தடுப்பில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.