அரிசி இறக்குமதிக்கு காலம் தாழ்த்தும் அநுர அரசாங்கம்!

அரிசி இறக்குமதிக்கு காலம் தாழ்த்தும் அநுர அரசாங்கம்!

நாடளாவிய ரீதியில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தாலும், அரசாங்கம் இதுவரையில் சிறிதளவு அரிசியை கூட இறக்குமதி செய்யவில்லை என சுங்கத் திணைக்களத்தின் தகவல் அறியும் வட்டாரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் மற்றும் சதொச ஆகியவை அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்த போதிலும், சதொச மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டு டெண்டர்களிலும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இதுவரை அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தவறியுள்ளதாக சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தனியார் இறக்குமதியாளர்கள் 28,500 மெட்றிக் டொன் பச்சை அரிசி மற்றும் 38,500 மெட்றிக் டொன் நாட்டு அரிசித் தொகை எனும் அடிப்படையில் 67,000 மெட்றிக் டொன் அரிசி நேற்று (25) வரையில் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share This