தொலைபேசி மற்றும் இணைய தொடர்பு வலையமைப்புகள் நாளை முழுமையாக மீட்டெடுக்கப்படும்

தொலைபேசி மற்றும் இணைய தொடர்பு வலையமைப்புகள் நாளை முழுமையாக மீட்டெடுக்கப்படும்

பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட நாட்டின் தொலைபேசி மற்றும் இணைய தொடர்பு வலையமைப்புகள் நாளை நான்காம் திகதிக்குள் முழுமையாக மீட்டெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இதற்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் கடுமையாக உழைத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக, மாகாணங்களை இணைக்கும் ஃபைபர் வலையமைப்புகள் 11 இடங்களில் துண்டிக்கப்பட்டது.

இவற்றில் ஒன்பது இடங்களை 24 மணி நேரத்திற்குள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்திது.

தற்போது, ​​அனைத்து மாகாணங்களையும் இணைக்கும் தொலைத்தொடர்பு அமைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில இடைநிலை இடங்களைத் தவிர, ஃபைபர் வலையமைப்பு வழியாக ஏனைய இடங்களில் தொடர்பு மேற்கொள்ளப்படுகிறது.”

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட மின் தடைகள் மற்றும் ஃபைபர் இணைப்பு இடையூறுகள் காரணமாக 4,000 க்கும் மேற்பட்ட பிரதான மின்மாற்றி கோபுரங்கள் செயலிழந்துள்ளன.

இவற்றில், இதுவரை சுமார் 2,800 கோபுரங்கள் செயல்பாட்டு நிலைக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளன. 949 கோபுரங்கள் மின் தடை காரணமாக செயலிழந்துள்ளன.

அதன்படி, மீதமுள்ள அனைத்து தளங்களையும் செயல்பாட்டு நிலைக்கு மீட்டெடுக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மிக விரைவாக செயல்பட்டு வருகின்றன.

தொலைத்தொடர்பு கோபுரங்களை விரைவாகச் சென்றடைவதற்கும், அவர்களுக்குத் தேவையான மின்சார வசதிகளை வழங்குவதற்கும் முப்படைகளும் அதிகபட்ச ஆதரவை வழங்கி வருகின்றன.

தற்போது, ​​நுவரெலியா, பதுளை, புத்தளம் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் சிக்கல்கள் நீடித்துள்ளன.

எவ்வாறாயினும், நாளை காலைக்குள், நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் 75 வீதத்திற்கும் அதிகமான இணைப்பைச் செயல்படுத்த எதிர்பார்க்கிறோம்.

கண்டியில் நாளை காலைக்குள் 70 வீத இணைப்பை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாளை மறுதினம் முழுமையான செயற்பாடுகளை வழமைக்கு கொண்டுவர முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )