தங்காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – விசாரணைகள் தீவிரம்

தங்காலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தங்காலை – உணாகூருவ வாவிக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்று மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் 68 வயதுடைய நபர் ஒருவரும், 59 வயதுடைய அவரது மனைவியும் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
இதனிடையே, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில், தங்காலை-மாத்தறை பிரதான சாலையில் உள்ள சீனிமோதர பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு பல விசாரணை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
